More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • டான் திரையரங்கு உரிமையையும் கைப்பற்றிய ரெட் ஜெயிண்ட் மூவிஸ்!
டான் திரையரங்கு உரிமையையும் கைப்பற்றிய ரெட் ஜெயிண்ட் மூவிஸ்!
Apr 07
டான் திரையரங்கு உரிமையையும் கைப்பற்றிய ரெட் ஜெயிண்ட் மூவிஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 



இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். K.M. பாஸ்கரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.



இந்தப் படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி திரு.G.K.M.தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி,  சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் திரு.கலையரசு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி  ராஜா.C ஆகியோர் இருந்தனர்.



தற்போது வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug15

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நட

Feb22

நடிகர் அஜித் எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை யார

Apr03

பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வர

Oct14

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க

Mar05

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்பு தொகுப்பாளராக களம

Mar07

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி

Sep15

ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்

Oct21