More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கோட்டாபய வீடு போகும் வரை நாங்கள் ஓயமாட்டோம் போராட்டக்காரர்கள் ஆவேசம்!
கோட்டாபய வீடு போகும் வரை நாங்கள் ஓயமாட்டோம் போராட்டக்காரர்கள் ஆவேசம்!
Apr 11
கோட்டாபய வீடு போகும் வரை நாங்கள் ஓயமாட்டோம் போராட்டக்காரர்கள் ஆவேசம்!

கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்திடலில் மக்கள் ஆரம்பித்த மாபெரும் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.



ஏராளமான மக்களின் பங்குபற்றுதலுடன் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.



கோட்டா வீட்டுக்குப் போகும் வரை நாங்கள் வீட்டுக்குப் போகமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.



தொடர்ச்சியாக இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு, குடிதண்ணீர் மற்றும் குடிபானங்களை வழங்கி வருகின்றனர்.



போராடும் மக்களுக்காக வைத்தியர்களும் இலவச வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றனர். அதேவேளை, போராட்டக்காரர்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மெத்தைகள் மற்றும் நகரும் கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளன.



மூன்றாம் இணைப்பு



அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முடிவுறாது தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 



தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். 



எனினும் நேற்றைய தினத்தைப் போலவே குறித்த பகுதியில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.  



இரண்டாம் இணைப்பு



ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட  அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. 



கொட்டித் தீர்க்கும் மழையிலும் போராட்டக்காரர்கள் சளைக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



தற்போது போராட்டத்தில் மேலும் பலர் இணைந்து கொண்டுள்ளதுடன் கோ ஹோம் கோட்டா என்ற கோஷம் பலமாக ஒலிக்கின்றது.



முதலாம் இணைப்பு



அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட  அஹிம்சை ரீதியான போராட்டம் இன்று வரை தொடர்கின்றது. 



கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச

Mar14

நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்

Aug10

ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வ

Jan26

புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக

Mar31

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்ச

Apr06

பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சி

May27

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ

Oct06

நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந

Mar27

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர

Sep04

மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த

Oct08

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள

Aug15

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன

Aug08

எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா

Mar26

வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக

Apr03

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகார