நடிகர் அஜித் தனது 51வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். அவருக்கு ரசிகர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள் பல விதங்களில் அஜித் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு அஜித்தின் மனைவி ஷாலினி உடன் இருக்கும் போட்டோ ஒன்றை அவரது தங்கை ஷாம்லி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
அது அஜித் பிறந்தநாள் பார்ட்டியில் எடுத்த போட்டோவாக தான் இருக்கும் என ரசிகர்கள் கருதி அதை அதிகம் பகிர தொடங்கி வைரல் ஆக்கி இருக்கின்றனர்.
அஜித் இருக்கும் போட்டோ எப்போது வரும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.