முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராகி இருக்கிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதன்படி சிம்பு நடிப்பில் இவர் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. அப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மதலீலை திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே தற்போது நாக சைதன்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் அப்படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்காக தன்னுடைய குழுவினருடன் ஹைதராபாத் சென்றுள்ளார் வெங்கட்பிரபு. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
AGS நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தின் அறிவிப்பு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியே வெளியாகி இருக்க வேண்டியதாம். ஆனால் சில காரணங்களால் அந்த அறிவிப்பை படக்குழு தள்ளி வைத்துள்ளதாம்.
