More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி: நாட்டில் எரிவாயு விலை குறையும் சாத்தியம் உள்ளதாக தகவல்!!
அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி: நாட்டில் எரிவாயு விலை குறையும் சாத்தியம் உள்ளதாக தகவல்!!
May 03
அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி: நாட்டில் எரிவாயு விலை குறையும் சாத்தியம் உள்ளதாக தகவல்!!

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு வருடத்திற்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.



குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் அண்மையில் அறிவித்திருந்தார்.



 



அதன்படி தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,



கடந்த இரு ஆண்டுகளில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனமானது மெட்ரிக் தொன் ஒன்றுக்கு அறவிட்ட தொகையை விட 9 டொலர் குறைவாக புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற முடியும்.



கடந்த 2 ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.



இதற்கமைய அடுத்த மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக விலைமனு கோரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.புதிய நிறுவனத்திடமிருந்து 9 டொலர் குறைவாக எரிவாயுவை பெற முடியும் என்பதால் நாட்டில் எரிவாயு விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந

Oct06

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம

Apr02

இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட

May20

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ

Sep19

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க

Mar21

நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ

Apr02

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன

Sep27

தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக

Aug11

வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ

Mar03

நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப

May01

அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த

Jul15

வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ

Oct03

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி

Sep23

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக

Sep07

இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள