பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் தலைவர் 169.
சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

இப்படத்தை தொடர்ந்து நெல்சன் மீண்டும் விஜய்யுடன் கைகோர்ப்பார் என்று சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், தற்போது தலைவர் 169 படத்தை தொடர்ந்து முதல் முறையாக தனுஷுடன் கைகோர்க்கவுள்ளாராம் நெல்சன் திலிப்குமார்.

இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் இப்படத்தை தயாரிப்பார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இவர் இதற்குமுன் மாஸ்டர், காத்துவாக்குல ரெண்டு காதல், மகான் போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.