விஜய் பீஸ்ட் படத்திற்கு அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி66 படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இந்த படத்தின் கதை குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் சென்டிமென்ட் நிறைந்ததாக இருக்கும் என இயக்குனர் வம்சி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வரும் சரத்குமார் பேட்டி அளித்திருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் வரை தளபதி 66 படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என கூறி உள்ள அவர், 'இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது, அனைத்து வகையான ரசிகர்கள் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த படம் இருக்கும்' என தெரிவித்து உள்ளார்.
