தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித்.
இவர் நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, வரும் தீபாவளி அன்று AK 61 திரைப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், AK 61 படம் வெளியாகும் அதே நாளில் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படமும் வெளியாகிறது என்று தெரியவந்துள்ளது.
இதன்முலம், கார்த்தியின் சர்தார் மற்றும் அஜித்தின் AK 61 ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் இந்த போட்டியில் யார் வெற்றிபெற போகிறார் என்று..