More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சம்பள உயர்வைக்கோரி தலவாக்கலையில் பாரிய போராட்டம்!
சம்பள உயர்வைக்கோரி தலவாக்கலையில் பாரிய போராட்டம்!
Oct 01
சம்பள உயர்வைக்கோரி தலவாக்கலையில் பாரிய போராட்டம்!

70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.



தலவாக்கலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.



மேற்படி சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் தலவாக்கலை மல்லியப்பு கோவில் சந்தி பகுதியில் ஆரம்பமான பேரணி, தலவாக்கலை நகரை வந்தடைந்து அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.



சம்பள உயர்வு மற்றும் தொழில்சார் சலுகைகளை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



2019 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நேற்றுடன் (30.09.2022) காலாவதியானது, இந்நிலையில் தற்போதைய வாழ்க்கைச் சுமைக்கேற்ப 70 வீத சம்பள உயர்வு வேண்டுமென இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் வலியுறுத்துகின்றது.



எனினும்இ 24 வீத சம்பள உயர்வை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முன்வந்துள்ளது. இதனை ஏற்க மறுத்தே  தமது கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் இடம்பெறுகின்றது.



தோட்டக் கம்பனிகளின் லாபம் மும்மடங்காக அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பள உயர்வை வழங்கக்கூடியதாக இருக்கும் என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.



மலையக மக்கள் முன்னணி உட்பட மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்கள் பல இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆ

Oct10

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர

Nov05

வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்ற

Jul09

2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று

Jul25

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக

Feb11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்

Apr12

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத

Jan11

மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி

Oct07

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி

May10

இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்க

Sep30

இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவ

May04

குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்

Feb02

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய

Mar12

  சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்

Apr01

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல