More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!...
நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!...
Oct 02
நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!...

அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக(PCoI), 504 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.



இதில் 2020 ஆம் ஆண்டில் மிகப் பெரிய தொகையான 120 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.



பொதுவாக இந்த குழுக்களின் கண்டறிவுகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பயனுள்ள முடிவுகளை தந்ததா என்பதை அளவிட முடியவில்லை.



2015, மார்ச் 3 (03.03.2015) மற்றும் இந்த ஆண்டு ஜூன் 30ஆம் (30.06.2022) திகதிக்கு இடையில், சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கான பணம் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் ஐந்து சிறப்பு ஆணைக்குழுக்களை நியமித்தார். இதற்காக அவரது பதவிக்காலத்தில் 337 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.



இவை அரசியல் பாதிப்புகளை விசாரணை செய்தல், எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்ட தவறுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்தல், முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழியை மதிப்பிடுவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை விசாரணை செய்தல் மற்றும் இலங்கை சுங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களாகும்.



2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடையில், நல்லாட்சி அரசாங்கத்தின் முதல் மூன்று வருடங்களில், ஐந்து ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவற்றுக்கு 254 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



பாரிய மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகள் (PRECIFAC) தொடர்பான விசாரணைகள், திறைசேரி பத்திரங்களை வழங்குதல் தொடர்பான விசாரணை, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை, அவரது சொந்த அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் விசாரணை, மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை என்பவற்றுக்காக இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச

Jan20

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக

Feb04

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகி

Mar08

வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்

Feb01

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த

Sep21

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத

Aug31

இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப

Jun19

கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை

Sep08

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம

Feb09

பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்

Jan28

யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க

Mar13

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக

Jan15

 பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி

Oct04

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை

Oct09

கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த