More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து ஜஸ்பிரிட் பும்ரா விலகல்!
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து ஜஸ்பிரிட் பும்ரா விலகல்!
Oct 04
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து ஜஸ்பிரிட் பும்ரா விலகல்!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.



முன்னதாக பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.



ஆனால் பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் அவருக்கு ஓய்வளிக்கபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளது.



இதற்கு அறுவைச் சிகிச்சை ஏதும் தேவை இல்லை எனவும் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் பட்சத்தில் அந்தக் காயம் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பும்ரா விலகியது இந்திய அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயரை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



மேலதிக வீரர்களாக உள்ள தீபக் சஹார், முகமது ஷமி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரில் ஒருவர் பிரதான அணியில் இணைத்துக் கொள்ளப்படுவர்.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க

Sep03

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள

Jan22

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி

May18

ஈரானிய கால்பந்தாட்ட அணியினர் கனடாவிற்கு சுற்றுப் பயண

Feb14

ஐ.பி.எல். ஏலத்தில் 2-வது நாளில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற

Jan29

சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர

May20

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்

Feb12

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக

Oct23

உலகக் கிண்ண வ-20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இந்

Jan17

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க

Oct01

ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன

Sep17

ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான இலங்கை அணி அற

Jul26

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ

Feb23

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3