More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு - எச்சரிக்கிறார் விஜித ஹேரத்!
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு - எச்சரிக்கிறார் விஜித ஹேரத்!
Oct 05
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு - எச்சரிக்கிறார் விஜித ஹேரத்!

சீனாவுடன்  கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினால்  நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய  பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.



ஆகவே அந்த உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என  மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சின் வரிச் சலுகைகள் மற்றும் சில வரிச் சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்  போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்



அவர் மேலும் குறிப்பிட்டதாவது,



சில நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கிக்கொண்டு, முதியோர் தினத்தன்று வங்கிகளில் முதியோர்களின் வங்கிக் கணக்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட 15 வீத வட்டியை முழுமையாக இல்லாமல் செய்துள்ளனர். இது முதியோர் தினத்தில் அவர்களுக்கு வழங்கிய பரிசை போன்றே இது உள்ளது. 



அவர்களின் மருந்துகளை வழங்குவதற்குக்கூட முடியாத நிலையில் இருக்கின்றனர். கம்பனிகளுக்கு வரிச்சலுகைகளை வழங்கிக்கொண்டு தங்களின் சொந்தப் பணத்தை வங்கிகளில் வைத்திருக்கும் முதியோருக்கு இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியுள்ளன.



கடந்த காலங்களில் வங்கிகளின் வட்டி வீதத்தில் மாற்றங்களை மேற்கொண்டமையினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறிய மற்றும் மத்திய தொழில்துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அநீதியானது.



இதேவேளை இங்கே ஊழல் மோசடிகளை நிறுத்தினாலே முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். முதலீட்டாளர்களுக்கு இங்கே அரசாங்கம் எப்படியிருந்தாலும் பிரச்சினையில்லை. அவர்களுக்கு முதலில் மோசடிகள் இல்லாத அரசாங்கமாக இருப்பதே முக்கியமானது.



இதேவேளை சீனாவுடன் செய்யவுள்ள வர்த்தக உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன என்று அறிந்துகொள்ள வேண்டும். அதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அதனை செய்யாது கையெழுத்திட்டால் இந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களால் பல்வேறு துறைகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற சந்தேகங்கள் உள்ளன. இதனால் அதில் உள்ளடக்கம் தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன் அதன் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun20

இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்

Mar13

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதே

Aug03

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல

Apr03

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு

Mar08

நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே

Jan25

2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் ய

Feb02

சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு

Sep29

Aflatoxin  அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், 

Feb09

நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும்,

Jan26

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

சு

May02

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி

Mar09

நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட

Aug13

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப

Jun10

வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப

Sep23

இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்