More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கெர்சனில் முக்கிய கிராமத்தை கைப்பற்றியது உக்ரைன் படைகள்!
கெர்சனில் முக்கிய கிராமத்தை கைப்பற்றியது உக்ரைன் படைகள்!
Oct 05
கெர்சனில் முக்கிய கிராமத்தை கைப்பற்றியது உக்ரைன் படைகள்!

உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய கிராமத்தை கைப்பற்றியு ள்ளதாக உக்ரைனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இதனை உறுதிப்படுத்தும் வகையில்இ டேவிடிவ் பிரிட் மீது உக்ரைனியக் கொடியை 35ஆவது கடற் படையினர் ஏற்றுவதைக் காட்டும் காணொளியை வெளியிட்டது.



அத்துடன் மற்றொரு ரஷ்ய இராணுவப் பின்வாங்கலை தொடர்ந்து அருகிலுள்ள பல கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.



எனினும் ரஷ்யா இன்னும் தெற்கில் பிராந்திய தலைநகரான கெர்சன் நகரத்தை கட்டுப்படுத்துகிறது. ஆனால் உக்ரைனிய மொழியில் டினிப்ரோ என்று அழைக்கப்படும் டினீப்பர் ஆற்றின் வடக்கே உள்ள முழுப் பகுதியில் பல இடங்களில் உக்ரைனிய படையினர் முன்னேறி வருகின்றனர்.



இதனிடையே உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடனான உரையாடலின் போது ஹிமார்ஸ் ரொக்கெட் லாஞ்சர்கள் உட்பட 625 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்தார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun25

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி

May08

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான

Mar10

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி

Sep24

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட

May14

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல

Jun10