சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்களது பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டனர்.
இதில் நாங்கள் இருவரும் இனி அவரவர் பாதையில் பயணிக்க போகிறோம் என்று தெரிவித்திருந்தனர். இந்த பிரிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இவர்கள் இருவரும் மீண்டும் சேர்த்து வைக்க அவர்களுடைய குடும்பத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் எதுவும் கைகூடவில்லை.
இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தங்களுடைய பிள்ளைகளுக்காக விவாகரத்தை தள்ளி வைத்துள்ளதாகவும். விரைவில் இருவரும் இணைந்து வாழப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தனுஷ் - ஐஸ்வர்யா மனந்திறந்து பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.