More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • தென்னாபிரிக்காவுக்கு இந்தியா பதிலடி: ஸ்ரேயஸ் ஐயர் அபாரம்!
தென்னாபிரிக்காவுக்கு இந்தியா பதிலடி: ஸ்ரேயஸ் ஐயர் அபாரம்!
Oct 10
தென்னாபிரிக்காவுக்கு இந்தியா பதிலடி: ஸ்ரேயஸ் ஐயர் அபாரம்!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.



இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.



ராஞ்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஹெய்டன் மார்கிரம் 79 ஓட்டங்களையும் ரீஸா ஹென்ரிக்ஸ் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர்இ ஷபாஸ் அஹமட், குல்தீப் யாதவ் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து 279 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காது 113 ஓட்டங்களையும் இசான் கிசான் 93 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், போர்ச்சுன், வெய்ன் பார்னெல் மற்றும் ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக 111 பந்துகளில் 15 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்ரேயஸ் ஐயர் தெரிவுசெய்யப்பட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul19

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அண

Feb01

சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக

Mar05

 இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர

May15

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக

Sep22

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்

Jan25

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ

Jul18

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக

Sep16

ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோப

Sep17

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய

Jul06

கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க

Mar05

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற

Jul17

தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்

Sep16

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந

Jul07

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி

Jul15

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்