More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் முற்றுகை!
சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் முற்றுகை!
Oct 14
சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் முற்றுகை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.



நேற்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது இந்த முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டது.



வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு, முள்ளாமுனை, பத்தரைக்கட்டை, கன்னங்குடா மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளிலேயே இந்த விசேட முற்றுமை முன்னெடுக்கப்பட்டது.



மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் அறிவுறுத்தலின் கீழ் மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தலைமையிலான குழுவினர் இந்த முற்றுகையினை முன்னெடுத்தனர்.



இப்பகுதிகளில் உள்ள ஆறுகளை அண்டியுள்ள காட்டுப்பகுதியிலேயே சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தெரிவித்தார்.



இதன்போது ஆறு பேர் கைதுசெய்யப்பட்டதுடன் சுமார் 130 லீற்றருக்கும் அதிகமான கசிப்பு மீட்கப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் சொந்தப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இதேநேரம் இம்மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையில் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் மற்றும் பியர் விற்பனை செய்த 25 வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொல

Jan22

யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ

Jan25

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக

Mar11

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்

Mar31

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த

Oct15

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்

May25

 பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்

Jan20

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் ம

Jun22

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 ப

Mar13

வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி

Oct06

தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட

Oct08

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும

May03

நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்

Mar03

உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்

Mar24

கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரி