விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் சாதித்து வரும் கலைஞர்கள் பலரும் உள்ளார்கள்.
அப்படி ஒரு சூப்பர் சிங்கர் சீசனில் கிராமிய பாடல்கள் மட்டுமே பாடுவோம் என்று கூறி பல கலக்கலான பாடல்கள் பாடி சாதனை புரிந்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்களை பற்றி கடந்த சில மாதங்களாகவே நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது செந்தில்-ராஜலட்சுமியின் புதிய வீட்டின் உள்ளே எப்படி உள்ளது என்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட வீடா இது அல்லது பங்களாவா என வாய் பிளந்து பார்க்கின்றனர்.