More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அகதியாக தமிழகம் செல்லும் இலங்கை தமிழர்கள்!
அகதியாக தமிழகம் செல்லும் இலங்கை தமிழர்கள்!
Oct 17
அகதியாக தமிழகம் செல்லும் இலங்கை தமிழர்கள்!

தொடரும் பொருளாதார  நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.



இலங்கை  தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம்  ஒப்படைத்தனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.



இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.



இந்நிலையில் மன்னார் மாவட்டம் பேசாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி. புலக்ஷன், சசிக்குமார்,கணுவியா, சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல் மணல் திட்டிற்கு சென்றுள்ளனர்.



தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் முதல் மணல் திட்டிலிருந்து  இலங்கைத்  தமிழர்களை ஹோவர்  கிராஃப்ட் படகு  மூலம் மீட்டு  தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு சென்று ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு பிறகு 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.



இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May22

இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த

Mar10

நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக

Aug14

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்

Oct06

பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட

Jan18

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட

Mar18

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய ச

Jul13

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ

Oct24

தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த

Jan24

இலங்கை மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண

Feb02

தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோ

May14

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து

May17

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்

Mar27

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறி

Sep29

தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த

Apr12

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம