More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்!
சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்!
Oct 17
சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில் மக்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கும் சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.



குறித்த கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தடுத்து வைக்கப்படுபவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என தெரிவித்துள்ளது.



கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு, குறித்த புனர்வாழ்வு மையங்களில் போதைக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை, தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வேறு ஏதேனும் குழுவை சேர்ந்தவர்கள் வலுக் கட்டாயமாக காவலில் வைக்க அனுமதிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது.



புனர்வாழ்வு பணியக சட்டமூலமானது, 'புனர்வாழ்வு' மையங்கள் இராணுவத்தினரை பணியாளர்களாக கொண்ட? பாதுகாப்பு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படும் புதிய நிர்வாகக் கட்டமைப்பை நிறுவும்.



ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மனித உரிமைகள் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் இந்த சட்டமூலமானது புனர்வாழ்வுக்காக அனுப்பப்படுவதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



எனினும் எந்தவொரு குற்றத்திலும் தண்டனை பெறாதவர்களை வலுக்கட்டாயமாக 'புனர்வாழ்வு' செய்வதற்கான தன்னிச்சையான அதிகாரங்களை வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



'உத்தேச புனர்வாழ்வு பணியக சட்டமானது குற்றஞ்சாட்டப்படாத ஒருவரை தடுப்புக்காவலில் வைப்பதன் புதிய வடிவம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.



அத்துடன் 'புனர்வாழ்வு சட்டமூலம், சித்திரவதை, தவறான சிகிச்சை மற்றும் முடிவில்லாத காவலில் வைக்கப்படுவதற்கான கதவைத் திறக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



புனர்வாழ்வு சட்டமூலம் என்பது இலங்கையில் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளை அங்கீகரிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு நெருக்கமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்

Jan30

கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மா

Mar29

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்

Mar25

நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த

Feb14

யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண

Feb07

கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ

Oct13

நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபி

Sep16

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்

Oct25

2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க

Apr01

களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை

Apr07

மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந

Sep21

மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி

Mar27


நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ

May22

அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி

Oct01

உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தி