யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், வடமாகாண பண்பாட்டலுவல்கள் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று யாழில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது
யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தலைமையில் இடப்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்,எம்.சமன் பந்துலசேனவும் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த விழாவில் 'யாழ்ப்பாணம்' எனும் நூல் வெளியீடும் 'இளங்கலைஞர்' விருது மற்றும் 'யாழ் முத்து' விருது ஆகிய விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.