இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. லட்சகணக்கான மக்கள் 6 புத்தகத்திற்கு மேல் இருந்தாலும் மிகவும் ஆர்வமாக வாங்கி படித்த ஒரு நாவல் பொன்னியின் செல்வன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்தில் இருந்து படமாக்கப்பட வேண்டும் என்று பல கலைஞர்கள் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த கனவு இப்போது மணிரத்திற்கு தான் நிறைவேறியுள்ளது.
ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 2 பாகங்களை கொண்டது. முதல் பாகம் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.
இப்படம் உலகம் முழுவதும் ரூ. 450 கோடிக்கு மேல் வசூலித்து கலக்கி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே நல்ல வசூலை பெற்றுள்ளது. அதாவது மொத்தமாக ரிலீஸ் ஆன நாள் முதல் நேற்று வரை படம் தமிழகத்தில் ரூ. 218 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.