More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அமைச்சுக்களின் செயலாளர்களில் திடீர் மாற்றம் ரணில் வழங்கிய நியமனம்!
அமைச்சுக்களின் செயலாளர்களில் திடீர் மாற்றம் ரணில் வழங்கிய நியமனம்!
Dec 28
அமைச்சுக்களின் செயலாளர்களில் திடீர் மாற்றம் ரணில் வழங்கிய நியமனம்!

முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். 



புதிய செயலாளர்கள் 



இதன்படி,  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.



அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.



மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய எச்.கே.டி.டபிள்யூ. எம்.என்.பி. ஹபுஹின்ன, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



இதேவேளை, யாழ்.மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கே. மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய எம். யமுனா பெரேரா, மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளனர்.



பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய எம்.எம். நைமுதீன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராகவும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய பி.பி. குணதிலக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து வணிக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராவும் விவசாய அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யு.டி.சி. ஜயலால், கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோரின் பதவிக் காலம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.  



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan12

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0

Jul22

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம

Mar09

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்க

Jun20

இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்

Apr05

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும

Oct14

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட

Jan22

யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில்

Mar09

வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ

Jun07

தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்

Jan27

பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற

Jun30

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச

Oct10

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்

Mar08

கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக

Sep03

ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி ந

May13

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ