வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், குறித்த நபரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இன்று காலை முதல் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடரி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவி மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதனைதடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த பெரிய உலுக்குளம் பகுதியை சேர்ந்த 60 வயதான டி.பி. அமராவதி, என்ற பெண் உயிரிழந்த நிலையில், அவரது மகளான 37 வயதான துலிகா ரத்தினசிறி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.