வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் 50 ஆவது நாளை முன்னிட்டு கிழக்கு அரியாலை பகுதியில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றினார்கள்.
குறித்த நிகழ்வு இன்று காலை இந்த பட்டம் பறக்கவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
அடுத்து வரும் 50 நாட்களுக்கான செயற்பாட்டை நோக்கிய கூட்டிணைவு செயற்பாட்டை பறை சாற்றும் ஒரு முயற்சியாக இந்த பட்டம் பறக்கவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
சட்ட தரணி அம்பிகா சிறிதரன் வடக்கு கிழக்கு மக்களிற்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவம் பற்றி பங்களிப்பு வழங்கிய இளைஞர் யுவதிகளிற்கு தெளிவுபடுத்தியிருந்தார்.