More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன- சார்ள்ஸ்
அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன- சார்ள்ஸ்
Sep 19
அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன- சார்ள்ஸ்

தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்துகிறது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



மன்னாரில் இன்று  காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்  ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.



வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினால் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டு கடைசியாக 2009 ஆம் ஆண்டு தமிழ் இனத்தை இனப்படுகொலையாக அழித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் ஊடாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்று நம்புகின்றார்கள்.



ஆனால் சர்வதேச நாடுகளை பொருத்தவரையில் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கு பகடைக்காயாக பயன்படுத்துவதாக நான் பார்க்கின்றேன்.



சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக தாயகம் புலத்தில் இருக்கின்ற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமித்து கோரிக்கை முன் வைத்த போதும்இ ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை கையாளுகின்ற நாடுகள் ஒரு மென் போக்கை கடைபிடித்து வருகிறது.



தற்போது வந்துள்ள பரிந்துரையில் பல விடையங்கள் இருந்தாலும் தீர்மானம் ஒன்று நிறைவேறும் போது பிரேரணை எந்தவித பயனும் இல்லாத ஒன்றாக காணப்படும்.



இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் எப்படியான தீர்மானங்களை நிறைவேற்றினாலும் இலங்கை அரசாங்கம் இவ்வளவு காலமும் ஐ.நா.பரிந்துரைகளுக்கும் தீர்மானங்களையும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.



தற்போதைய பரிந்துரையின் போது அமைச்சர் அலி சப்ரிஇ அதற்கு உடன் படமாட்டோம் என்று கூறியிருக்கிறார்.



தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற ஒரு சூழ்நிலையும் மேற்குலக நாடுகளும் தமிழர் தரப்பை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற சூழ்நிலை தான் தொடர்ச்சியாக காணப்படுகின்றது- என அவர் மேலும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன

Sep24

மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்

Feb02

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல

Feb01

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந

Sep26

அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா

Apr27

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது

Jan20

தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி

Mar23