More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன்: எனேயா பாஸ்டியாநினி சம்பியன்!
கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன்: எனேயா பாஸ்டியாநினி சம்பியன்!
Sep 19
கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன்: எனேயா பாஸ்டியாநினி சம்பியன்!

மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன் சுற்றில் டுகார்டி அணியின் எனேயா பாஸ்டியாநினி சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.





இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது.



அந்த வகையில் ஆண்டின் 15ஆவது சுற்றான கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன் பிரிக்ஸ்இ நேற்று  சியுடாட் டெல் மோட்டார் டி அரகோன் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.



இதில் 116.8 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி 23 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.



இதில் டுகார்டி அணியின் எனேயா பாஸ்டியாநினி பந்தய தூரத்தை 41 நிமிடங்கள் 35.462 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.



இதையடுத்து டுகார்டி அணியின் பிரான்செஸ்கோ பெக்னய, பந்தய தூரத்தை 0.042 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.



இவரையடுத்து அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ 06.139 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.



இதுவரை நடந்து முடிந்துள்ள 15 சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ மூன்று சம்பியன் பட்டங்களுடன் 211 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.



டுகார்டி அணியின் பிரான்செஸ்கோ பெக்னய ஆறு சம்பியன் பட்டங்களுடன் 201 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ ஒரு சம்பியன் பட்டத்துடன் 194 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.



16ஆவது சுற்றான ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் எதிர்வரும் 25ஆம் திகதி மொபிலிட்டி ரிசார்ட் மோடேகி சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct16

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல

Jul07

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி

Jan02

 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை

Jul19

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அண

Oct01

வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி

Feb12

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,

Feb21

இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட

Sep17

ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான இலங்கை அணி அற

Mar09

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ

Oct26

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ப

Mar06

மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று

Sep07

ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந

Jan29

சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர

Nov21

200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர

Aug04

ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5