More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பயன்படுத்த முடியாத புகையிரத தண்டவாளங்களை விற்பனை செய்யத் தீர்மானம் - பந்துல!
பயன்படுத்த முடியாத புகையிரத தண்டவாளங்களை விற்பனை செய்யத் தீர்மானம் - பந்துல!
Sep 21
பயன்படுத்த முடியாத புகையிரத தண்டவாளங்களை விற்பனை செய்யத் தீர்மானம் - பந்துல!

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளம் செலுத்துவது கூட சவால்மிக்கதாக உள்ளது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தண்டவாளங்களை சர்வதேச விலைமனுகோரல் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது எதிர்தரப்பின் உறுப்பினர் அசோக அபேசிங்க முன்வைத்த வாய்மொழி மூலமான வினாவுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் குறிப்பிட்டதாவது,



பொல்கஹாவெல-குருநாகல் புகையிரத பாதையை இரட்டை வழி பாதையாக மாற்றியமைக்கும் செயற்திட்டம் எப்போது நிறைவு பெறும் என்பதை குறிப்பிட முடியாது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.



பொருளாதார நெருக்கடியினால் அரச முறை கடன் மீள் செலுத்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் அரச முறை கடனை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.



இக்காரணிகளினால் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான முதலீட்டு தவணை ஒதுக்கீடும் தாமதப்படுப்பட்டுள்ளன. பொல்கஹாவெல- குருநாகல் இரட்டை வழி  புகையிரத பாதை அபிவிருத்திக்கான நிதியுதவியும் அவ்வாறே தாமதப்படுத்தப்பட்டுள்ளன.



தேசிய நிதியை கொண்டு இந்த அபிவிருத்தி பணியை முன்னெடுக்கவும் முடியாது. நாணயத்தை அச்சிட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளத்தை செலுத்துவது கூட சவால்மிக்கதாக உள்ளது.



புகையிரத சேவையினை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு தேவையான அடிப்படை கருவிகளை இறக்குமதி செய்ததிலும் நிதி நெருக்கடி காணப்படுகிறது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள புகையிரத தண்டவாளங்களை சர்வதேச விலை மனுகோரலுக்கமைய விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan31

யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந

Apr20

ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த

Feb23

பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற

Apr08

யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு

Jun11

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளும

Mar30


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்

Jan27

பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற

May01

வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த

Mar12

கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்

Apr04

 ராஜபக்ச அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள்

Oct05

முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உற

Mar10

நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா

Feb15

இரத்தினபுரியில் பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத

Sep17

நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம

May17

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்