More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது- வவுனிநா நீதிமன்றம்!
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது- வவுனிநா நீதிமன்றம்!
Sep 23
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது- வவுனிநா நீதிமன்றம்!

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக படி அமைத்தமை, அதற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை நேற்று வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.



வவுனியாஇ வடக்கு நெடுங்கேணியில் அமைவு பெற்றுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் சென்று வழிபாடு செய்யவும், ஆலயத்தினை புனருத்தானம் செய்யவும் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டதோடு, குறித்த ஆலயத்தில் புதிதாக அபிவிருத்தி செய்த குற்றசாட்டில் குறித்த ஆலய பூசகர், நிர்வாகத்தினர் மீதும் நெடுங்கேணி பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.



அதற்கமைய நேற்றையதினம் குறித்த வழக்கானது வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், குறித்த வழக்கு தொடர்பாக சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.



இதன்போது கருத்து தெரிவித்த அவர்இ வெடுக்குநாரிமலை ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர், பூசகர் குறித்த வழக்கிற்கு சமூகம் அளித்திருந்தார்கள்.



சட்டத்தரணி தயாபரன் தலைமையிலான எட்டு சட்டதரணிகள் குழாம் இதற்கு ஆதரவாக ஆஜராகியிருந்தார்கள். குறித்த வழக்கில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.



அதில் பொலிஸ் சாஜனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், குறித்த பிரச்சினைக்கு அரசியல் தலையீடே காரணம் என கூறியிருந்தார்.



அத்தோடு குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலய நிர்வாகத்தினர், பூசகர் இதற்கு காரணம் இல்லை எனவும் குறித்த ஆலயத்தில் பூசைக்கு தடையில்லை எனவும் இதற்கு காரணமான உண்மையான குற்றவாளி யார் என்பதை எதிர்வரும் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்பதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்ற நீதவானால் உத்தரவு பணிக்கப்பட்டிருந்தது.



மேலும் ஆலயங்களில் சிலர் அரசியல் நடத்துவதே குறித்த பிரச்சினைக்கான காரணம் என்றும் ஆலயங்களின் வழக்கத்தின்படி ஒரு ஆலயத்தில் நித்திய பூஜைகள் கட்டாயம் நடைபெற வேண்டும் என்றும் நீதவானால் தெரிவிக்கப்பட்டது.



தொல்பொருள் திணைக்களத்தின் விளம்பரப் பலகையும் இதையே சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறியிருந்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று  யாழ்

Feb15

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க

Mar25

நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்

Apr19

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ

Apr09

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு  அடுத்த

Sep13

வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான

Mar30

வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எ

Apr09

தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்

Oct08

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண

Sep22

இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க

Sep19

யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார

Jan15

இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்

Feb12

இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்

Mar16

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப

Feb02

 

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ