More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முதியோர்களுக்கான கொடுப்பனவு பெறுவதில் இழுபறி நிலை!
முதியோர்களுக்கான கொடுப்பனவு பெறுவதில் இழுபறி நிலை!
Sep 23
முதியோர்களுக்கான கொடுப்பனவு பெறுவதில் இழுபறி நிலை!

முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்று வரப்பட்டது.



தற்பொழுது சமுர்த்தி வங்கியின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமென தபால் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் தமது முதியோர் கொடுப்பணவினை பெற பல கிலோமீட்டர் தூரங்களில் இருந்தும் சமுர்த்தி வங்கிக்குச் சென்று தமது பெற பணத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.



தற்பொழுது பணத்தை பெற வேண்டுமாயின் அதற்கான வங்கிக் கணக்கினை புதிதாக திறக்க வேண்டும் என சமுர்த்தி வங்கியினர் தெரிவித்துள்ளனர்.



அப்படி திறந்தபின்பும் தமக்கு இன்னும் பணம் கிடைக்கப்பெறவில்லை எனவும் கிடைத்தவுடன் கிராம சேவையாளர் ஊடாக தெரியப் படுத்திய பின் வந்து கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.



இதன் காரணமாக தமக்கு வழங்கப்படுகின்ற ஆயிரத்து 900 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக 2000 ரூபாய்க்கு அதிகமான பணத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலர் கவலை தெரிவித்துள்ளனர்.



தற்பொழுது வழங்கப்படுகின்ற 1900 ரூபாய் பணத்தை நம்பியே சில முதியவர்கள் தமது அத்தியா வசிய செலவினை மேற்கொண்டு வந்தனர். அப்பணம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் தபால் நிலையங்கள் ஊடாகவே தமது பணத்தினை பெறுவது இலகுவாக அமைந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.



குறித்த உதவி பணத்தினை தபால் நிலையங்களில் ஊடாகவே பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒழுங்கமைத்து தரும்படி முதியவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct20

கதிர்காமம் - தம்பே வீதியில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3

Apr17

இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல

Oct23

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு

Jan19

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமைய

Jan20

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்

Jul27

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள

Apr07

யாழ். மாவட்டத்தில் நாளை  (08) முதல் தேநீர், பால் தேநீர், ப

Mar01

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்

Mar15

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான

Sep20

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள

Oct23

பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம

Apr03

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி த

Aug01

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்

Oct13

ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்