மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 15 அடி நீளமான இராட்சத முதலை ஒன்று பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட முதலையை 06 மணித்தியாலங்கள் கட்டி வைத்து வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
1000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த முதலையின் கை, கால்கள் மூன்றடி வரை வளர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.