காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆழ்கடல் பாரிய படகு கடந்த வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.
காரைதீவைச் சேர்ந்த எஸ் .கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குறித்த படகு, வலைகளோடு கடலுக்குள் மூழ்கிய வண்ணம் இருந்தது .
இதையடுத்து, படகு உரிமையாளர் மற்றும் அவரது குழுவினர் காரைதீவு கடற்படையினருடன் இணைந்து ஆழ் கடலுக்குச் சென்று பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு படகை மீட்டனர்.
படகு பாரிய சேதத்திற்குள்ளாகியமை தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.