ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நீக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் உரையாற்றிய ஜயசுமண,
கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமே நீக்கப்பட வேண்டியவர். பீரிஸ் அல்ல என குறிப்பிட்டார்.
மார்ச் 04 அன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் பீரிஸை நீக்குவதற்கான கட்சியின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்ததாக காரியவசம் அறிவித்தார், மேலும் வெற்றிடமான பதவியை யார் நிரப்புவது என்பதை தீர்மானிக்க சபை இந்த வாரம் கூடவுள்ளது.
எனினும், கட்சியின் நிறைவேற்று சபையினால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவே இந்த தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், பேராசிரியர் பீரிஸின் நியாயமற்ற பதவி நீக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாகக் கூறினார்.
சாகர காரியவசத்திற்கு கட்சியின் கொள்கைகள் தெரியாது. இறுதியில் கட்சி மற்றும் செயலாளர் பதவி இரண்டையும் பேராசிரியர் பீரிஸிடம் கொடுத்துவிட்டு சாகர காரியவசம் வீட்டுக்குச் செல்ல வேண்டும்” என்று பேராசிரியர் ஜெயசுமண கூறினார்.