மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிராம் ஹொக்கெய்னுடன் பிரேசிலில் இருந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடையவர் குறித்த வெளிநாட்டவர் பிரேசிலில் இருந்து வந்துள்ள போதிலும், அவர் மெசிடோனிய பிரஜை எனவும் அவர் முதல் தடவையாக இலங்கை வந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (13) சந்தேகநபரின் பயணப் பொதியை பரிசோதித்த போது குறித்த சட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹொக்கெய்னின் சந்தைப் பெறுமதி 17 மில்லியன் ரூபா என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஹொக்கெய்ன் போதைப்பொருள் சூப் பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.