More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பாதி முடங்கியது இலங்கை!!
பாதி முடங்கியது இலங்கை!!
Mar 15
பாதி முடங்கியது இலங்கை!!

கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும் அஞ்சல் உள்ளிட்ட 40 துறைசார் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.



அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.



அதிபர், ஆசிரியர் மற்றும் ஆசிரிய உதவியாளர்கள் இன்றைய தினம், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் இன்றைய தினம் பணி புறக்கணிப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.



இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இன்று நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.



இன்று இடம்பெறுகின்ற பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளித்து துறைமுகங்கள் மற்றும் நீர் வளங்கள் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.



அதேநேரம் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கமும், இன்று சுகையீன விடுமுறை அறிக்கையிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றது.



இதேவேளை, அஞ்சல் சேவை ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், திட்டமிட்டவாறு நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.



இதேவேளை, இன்றைய பணிபுறக்கணிப்பிற்கு தமது சங்கம் ஆதரவளிக்காது என சமுர்த்தி மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்

Sep23

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா

Mar27

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ

Jun17

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்

Sep16

முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன

Feb02

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல

May31

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்

Feb01

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ

Jan28

இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமு

Jan01

இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச

Sep20

மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப

May15

இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி

Jul18

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள

Feb07

பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த

Oct18

எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்