வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பிரஜையை போத்தலால் தாக்கி காயப்படுத்திய மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த ரஷ்ய பிரஜை மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
32 வயதுடைய ரஷ்ய பிரஜை வெலிகம நகரிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு மது போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய சென்றதாகவும், அங்கு வரிசையில் நிற்காமல், அதனை தவிர்த்து மது போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற மீனவர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரஷ்ய பிரஜை மீனவரை தாக்கியதாகவும், பின்னர் மீனவர் போத்தல் ஒன்றினால் ரஷ்ய பிரஜையை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.