More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியாவில் புத்தரை காணவில்லை என தமிழர் முறைப்பாடு
வவுனியாவில் புத்தரை காணவில்லை என தமிழர் முறைப்பாடு
Apr 10
வவுனியாவில் புத்தரை காணவில்லை என தமிழர் முறைப்பாடு

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப் பகுதியில் தற்போது வசித்து வரும் தமிழர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.



வவுனியா - செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று (09) புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது நேற்று (09) மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில் இன்றைய தினம் (10) குறித்த நபர் தானே தனது காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை காணவில்லை எனவும் செட்டிகுளம் பொலிஸில் முறையிட்டுள்ளார்.



குறித்த நபர் கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்திற்கு வந்து தங்கியுள்ளார். 



இந்நிலையிலேயே குறித்த புத்தர் சிலையை அவர் தனது காணிக்கு முன்னால் உள்ள அரச காணியில் வைத்துள்ளார்.



இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதனை தவிர்க்க

Jan11

திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற

Sep17

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட

Jan30

மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி

Feb04

யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் அதிகாலையில் வழிப்பற

Jun16

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த

Apr11

தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர

Feb02

சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு

May15

பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்

Jul02

நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப

Feb01

முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க

Jun03

இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர

May13

அதாள பதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத

Jul15

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட

Sep19

கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ