மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (புதன்கிழமை) நடத்தபடவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
சுகாதார பிரிவு கொவிட் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.