இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கேகாலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொக்கல பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சரின் இரண்டு மகன்கள், சாரதி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சருடன் நெருங்கிப் பழகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.