More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மோசடி குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவன தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை!
மோசடி குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவன தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை!
Jan 19
மோசடி குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவன தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை!

தென் கொரியாவின் சாம்சங் நிறுவன தலைவருக்கு ஒரு பெரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட, உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன்   தயாரிப்பாளரான சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக லீ ஜெய்-யோங் உள்ளார். சாம்சங் குழுமத்தின் 3-ஆம் தலைமுறை தலைவரான லீ, அவரது தந்தை லீ குன்-ஹீ மரணத்துக்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.



இந்த நிலையில், சாம்சுங் நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்த இரண்டு இணை நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக, முன்னாள் தென் கொரியா அதிபர் பார்க் கியுன் ஹை -வின் கூட்டாளியான சோய் சூன்-சில்  என்பவருக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக  ஜெய்-யோங்  2017-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



அதன்பிறகு அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டது, பின்னர் மேல்முறையீடு செய்ததில் அந்த தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.  இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்  ஜெய்-யோங்க்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . 



இந்த தீர்ப்பு இப்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால், சாம்சுங் நிறுவனம் அதன் உச்சபட்ச முடிவெடுப்பாளரை தற்காலிகமாக இழந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb17

இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்ய

Mar24

உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பும் போலந்து ய

Jul09

குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்

Mar10

உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகாமையில் ரஷ்ய துர

Feb18

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்

May02

எப்போதும் சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி துணை ந

Sep01

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Feb24

நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட

Aug28