More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பைடனின் பதவியேற்புக்கு முன்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
பைடனின் பதவியேற்புக்கு முன்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
Jan 19
பைடனின் பதவியேற்புக்கு முன்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற இரண்டு நாட்கள் உள்ள நிலையில் பாதுகாப்பு எச்சரிக்கையை அடுத்து வொஷிங்டனில் உள்ள கெப்பிட்டல்  வளாகத்தில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்க பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் தீ பரவுவதாக பொலிஸார் தெரிவித்ததுடன் பைடனின் பதவியேற்பு நிகழ்வு ஒத்திகையும் நிறுத்தப்பட்டது.



ஜனவரி ஆறாம் திகதி பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கெப்பிட்டல் கட்டடத்திற்கு நுழைந்து மேற்கொண்ட வன்முறையில் ஆறு பேர் உயிரிழந்தனர்.



இந்த நிலையில் கெப்பிட்டல் மற்றும் மத்திய வொஷிங்டனில் ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



பொது மக்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



காங்கிரஸ் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன புதன்கிழமை நடைபெற உள்ள பதவியேற்பு நிகழ்வின் பின்னர் மீண்டும் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை நாட்டில் உள்ள கொரோனா நெருக்கடி காரணமாக ஜனவரி 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொள்பவர்கள் வரையறுக்கப்பட உள்ளனர்.



வழமையாக இரண்டு இலட்சம் டிக்கட்டுகள் விற்பனையாகும் .ஆனால் இம்முறை ஆயிரம் டிக்கட்டுக்கள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளன.



கொலம்பிய மாவட்டம் மற்றும் ஐம்பது மாநிலங்களிலும் வன்முறைகள் தலைத்தூக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



 


 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய

Apr02

இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ

Mar12

சீன தலைநகர் பெய்ஜிங்கில் வானில் இருந்து திடீரென புழு

Feb22

சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து

Mar10

போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்

Sep14

ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல

Aug23

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா

Mar22

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க

Sep27

ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்

Sep14

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்

Mar26

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர

May11

ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பா

Jul22

சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழைய

Jul18

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற

Sep14

இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்