More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி அரசியலில் பங்கு பெறவேண்டும்- பிரேமலதா!
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி அரசியலில் பங்கு பெறவேண்டும்- பிரேமலதா!
Jan 24
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி அரசியலில் பங்கு பெறவேண்டும்- பிரேமலதா!

சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்கு பெறவேண்டுமென பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.



சிக்கராயபுரத்தில் நடைபெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



குறித்த  ஊடக சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் மேலும் கூறியுள்ளதாவது, “நாளைக்கே தேர்தல் நடந்தாலும் அதை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது.



சென்னை, ஆவடி, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்பட 37 தொகுதியை எனது பொறுப்பில் விஜயகாந்த் வழங்கி உள்ளார்.



தேர்தலில் கூட்டணி இருக்கா?, இல்லையா? என்பதை விஜயகாந்த் முடிவு எடுத்து அறிவிப்பார். தே.மு.தி.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தற்போது வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தே.மு.தி.க.தான். விஜயகாந்தான் தமிழகத்தில் பா.ஜ.க.சின்னத்தை கொண்டு சென்றவர்.



மேலும் விஜயகாந்தை காப்பதும் அவர் உருவாக்கிய கட்சியை சிறிதும் சரியாமல் காப்பதும் எனது கடமை. தேர்தல் இறுதிகட்டத்தில் அவர் பிரசாரத்துக்கு வர தயாராக உள்ளார்.



இந்த தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் எனது குரல் ஒலிக்கவேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. விஜயகாந்த் அனுமதி கொடுத்து, ஆண்டவன் அருள் இருந்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன்.



ஒரு பெண் என்ற முறையில் ஒரு பெண்ணாக சசிகலா விடுதலையை வரவேற்கிறேன். ஜெயலலிதாவுக்காகவே வாழ்ந்தவர் சசிகலா. அவருக்கு என்று தனி வாழ்க்கை கிடையாது.



அவர் பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி வந்து, தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும். ஒரு பெண்ணாக அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு” என அவர் கூறியுள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு 

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற

Jan01

சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை

Oct24

புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ

Jul03

த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள

May09

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள

Jan03

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி

May01

கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப

Sep13

உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியா

Apr17

நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட

Mar21

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந

Feb25

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ

Mar07

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள

Mar29

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே

Aug22

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில