More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் !
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்  !
Jan 21
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் !

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.



அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரும் தங்களது இராஜினாமா கடிதங்களை வழங்கி ஒருமாதத்துக்கும் மேலாகின்றது.



இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐவருக்கு பதிலாக ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கவேண்டிய பொறுப்பு அமைச்சருக்கே உண்டு.



இது தொடர்பாக 2002 ஆம் ஆண்டின் 35 ஆவது இலக்க இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைகுழுச் சட்டத்தில்  4 (4) பிரிவின் படி ஆணைக்குழுவுக்கான தவிசாளர் துறைக்கு பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்பட வேண்டும்.



அந்த வகையில் தற்பொழுது இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு நிதியமைச்சின் கீழ் இருக்கின்ற நிலையில் அமைச்சிற்கு பொறுப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆணைக்குழு உறுப்பினர்களை நாடளுமன்ற பேரவையின் ஒருமைப்பாட்டுடன் நியமிக்க வேண்டியவராக உள்ளார்.



குறித்த வெற்றிடங்களை சமர்ப்பித்து ஒரு மாத காலத்துக்குள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதுவரை இந்த வெற்றிடம் நிரப்பப்படாமல் இருக்கின்றது. எனவே இதற்கு பொறுப்பான பிரதமர் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கதாதன் காரணமாக ஏற்கனவே  திரவ இயற்கை எரிவாயுவிற்காக வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து விலைமனுக் கோரல்களினூடாக மின்சாரத்தில் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது தாமதமாகின்றது.



அனுமதிக்கப்பட்ட மின்சார விலையை மீளப்பரிசீலனை செய்தல், தொகை மின்சார விநியோக உரிமையாளர்களிற்கான விலை தீர்மானிப்பு மற்றும் பொது மக்களுக்கான மின்சார கட்டணங்கள் தொர்பான ஆராய்வு போன்ற பல விடயங்கள் தாமதமாகின்றன.“ எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரும் தங்களது இராஜினாமா கடிதங்களை வழங்கி ஒருமாதத்துக்கும் மேலாகின்ற நிலையிலேயே சேவையாளர்கள் சங்கத்தினால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun06

நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள்,  வெளிச்ச

Feb03

சட்டவிரோதமாக 75 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியமை தொட

Sep12

வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண

Jan28

யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க

Feb02

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல

Jan19

வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய

Jul10

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ

Jun07

அரசியல்வாதிகள் தயாரில்லை!

நாட்டின் பொருளாதாரத்த

Oct05

மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.

Feb02

பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி

Oct06

நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந

Mar02

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல

Feb02

கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்

Mar09

சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல

Oct20

ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே