வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று (வியாழக்கிழமை) 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் வருகை தந்த 8 விமானங்களின் ஊடாக 213 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் சௌதி அரேபியாவில் இருந்து 76 பேர், ஓமானில் இருந்து 50 பேர் மற்றும் தென் கொரியாவில் இருந்து 13 பேர் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை வந்தடைந்த அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர்.
இதேவேளை 12 விமானங்கள் ஊடாக 542 பேர் வௌிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது