More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்
ஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்
Jan 26
ஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.



நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “1958 களில் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு அடக்கு முறை 2009 இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இராணுவ பிடிக்குள் அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.



நடைபெற இருக்கின்ற ஐ.நா.மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.



போர்க்குற்றங்கள் தொடர்பான குழு நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த விதமான தகுதிகளும் இல்லை. கோட்டாபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக இருந்த போதுதான் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது.



போர்க் குற்றம் புரிந்தவர்களே போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு குழு நியமிப்பது ஒரு கேளிக் கூத்தான விடயம். இந்த குழுவை சர்வதேசமோ ஐ.நா மனித உரிமைப் பேரவையோ எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.



அவர்களும் இதை ஒரு கேளிக்கை விடயமாகவே பார்ப்பார்கள்.  நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்து கொண்டு சர்வாதிகார போக்கிலான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இருக்கின்றது.



1958 காலப் பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் 2009ஆம் ஆண்டு மிகப் பெரிய இனப்படுகொலை நடந்த பின் அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்களை இராணுவப்பிடிக்குள் வைத்து தமிழர்களின் நில அபகரிப்பு, மத அடையாளங்கள் அழிப்பு, கலாசாரங்கள் அழிப்புக்கள் தொர்ந்து கொண்டிருக்கின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep15

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ

May20

இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர

Oct07

இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்

Jan19

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’

Sep23

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத

Apr16

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைக

Jun06

வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்

Feb02

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ

Apr19

இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச

Mar13

அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்

Oct25

நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு

Feb02

சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு

Jan29

உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து

Sep28

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்

Oct05

கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா