இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சலே பச்செலெட்டின் அறிக்கையை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து பல்வேறு விடயங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில் இந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.
2009ம் ஆண்டு முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட இலங்கையில் படைத்தளபதிகளுக்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் முக்கிய பதவிகளிற்கு தற்போது பணியில் உள்ள அல்லது ஒய்வுபெற்ற 28 இராணுவஅதிகாரிகளையும் புலனாய்வுபிரிவினரையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார் என கரிசனை வெளியிட்டுள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் இவர்களில் சிலர் யுத்தத்தின் இறுதிகாலத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் யுதத குற்றங்களில் ஈடுபட்டனர் என ஐக்கியநாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.