போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகள் உணர வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு உதாசீனம் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள் என்றும் அவர் கூறியுள்ளார்.
வன்முறை தவிர்க்கப்பட வேண்டும், ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.