கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து கம்பஹா கிளையை மூடுவதற்கு கம்பஹா பிரதேச மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு காய்ச்சல் தென்பட்டுள்ளது. இதையடுத்து 13 பேர் நோய் எதிர்ப்பு பரிசோதனை செய்தனர். இதில் 10 பேர் தொற்றுக்குள்ளானமை தெரியவந்ததாக கம்பஹா சுகாதார உதவி மருத்துவ அதிகாரி ரவீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
31 பேர் பணியாற்றும் இக்கிளை நிறுவனத்தில் அன்டிஜென் சோதனைக்கு உட்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதுடன் அவர்கள் வதியும் இடங்களில் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.