More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!
Jan 30
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:



கர்நாடகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 17-ந் தேதி நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதால், போலியோ சொட்டு மருந்து வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந் தேதி (நாளை) நடக்கிறது. இதில் கர்நாடகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 64 லட்சத்து 7 ஆயிரத்து 930 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா தனது அலுவலக இல்லத்தில் தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளும், இப்போது போலியோ சொட்டு மருந்தை பெற வேண்டும். இந்த சொட்டு மருந்தால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவது இல்லை. கர்நாடகத்தில் 11 ஆண்டுகளாக புதிதாக போலியோ பாதிப்புகள் ஏற்படவில்லை.



போலியோ இல்லாத நாடாக இந்தியா ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். 85 லட்சத்து 5 ஆயிரத்து 60 டோஸ் சொட்டு மருந்துகள் தயாராக உள்ளன. இந்த பணியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 179 மருத்துவ ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.



6, 645 மேற்பார்வையாளர்கள், 904 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 32 ஆயிரத்து 908 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் தவறான தகவல்களை மக்கள் நம்பக்கூடாது. சிலருக்கு லேசான பக்க விளைவுகள் இருந்தன. ஆனால் அதுவும் சரியாகிவிட்டது.



இந்த தடுப்பூசியை நாம் பயன்படுத்தாவிட்டால், நமக்கு மிகப்பெரிய இழப்பு. கர்நாடகத்தில் பள்ளிகளை திறக்க அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வித்துறை இணைந்து இந்த விஷயத்தில் செயல்பட்டு வருகிறது.



இவ்வாறு சுதாகர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug05

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வ

Jun09

  இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வ

May21

தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா

Sep14

பள்ளிக்கல்வித்துறை 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ

Aug24

* மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண

Oct03

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும

Jul15

சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க

Mar06

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்

Jun10

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <

Aug09

கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம்

Oct30

நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகை

Oct14

மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப

Feb02

கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத

Mar09

தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ச