More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!
Feb 01
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.



மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.



இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். பலப்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



கடல் நிலை: பலப்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.



நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

 

பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத

Jan29

 அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்

Jun08

நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு

Sep27

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமா

Mar14

அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்

Apr04

  இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரச

Jun03

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட

Mar05

கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா

May09

 இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்

Jan25

2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா

Jul01

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சி

Jun12

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்

Feb15

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ

Jun19

கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை

Jun12

  நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன