தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின் மொத்த விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று 40 சதவீதம் குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகள் அதிகம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத் திற்குக் கொண்டுவருவதாலே இதற்குக் காரணம் என்று வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த வாரம் பிரதான மரக்கறிகளின் கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவை தாண்டியிருந்தது.
அதன்படி, கடந்த வாரம் போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 230க்கும் 280 இடையில் அதிகரித்துக் காணப் பட்டதாகவும் இந்த நாட்களில் போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 100 ரூபாவாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போஞ்சி விலை வீழ்ச்சியால் ஏனைய மரக் கறிகளின் கிலோ ஒன்றுக்கான மொத்த விலை குறையும் என்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.